ஒரே ஒரு படம் மூலம் அதிதி ஷங்கருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த ரசிகர்கள்! வேற லெவல்

‘விருமன்’ படம் மூலம் ரசிகர்களை ஈர்த்த அதிதி ஷங்கர்!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்த நிலையில், அவருக்கு ஒரே படத்திலேயே ரசிகர் மன்றம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Karthi, Aditi Shankar, Viruman 12-Aug-2022

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ‘விருமன்’ திரைப்படம் இன்று வெளியான நிலையில், இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் அதே வேளை அதிதி ஷங்கர் நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘விருமன்’ படம் வெளியாகிய ஒரே நாளில் அதிதி ஷங்கருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வைரலாகியுள்ளன. இன்று சென்னை ரோகினி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்த அதிதி ஷங்கருக்கு அவருடைய ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner