சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

சமந்தாவின் அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!

பிரபல முன்னணி நடிகை சமந்தா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘யசோதா’ படத்தில் நடித்து வ வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha, Yashoda 12-Aug-2022

இந்நிலையில் சமந்தா இந்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் அவை நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்றய நடிகர்களின் பணிகள் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்ட நிலையில் பணிகள் முடிவடையாததால் தற்போது செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.