சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் தகவல்!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் லேட்டஸ்ட் சூப்பர் அப்டேட்!

மாநாடு திரைப்படத்துக்கு பின் சிம்பு நடித்துள்ள திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் சிம்பு – கௌதம் மேனன் – ஏ ஆர் ரஹ்மான் போன்றோர் மூன்றாவது முறையாக இணையும் வெற்றிக் கூட்டணியாக அமைந்துள்ளது.

Simbu, Vendhu Thanindhathu Kaadu 12-Aug-2022

மேலும் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில், சிம்பு தனது காட்சிகளுக்கான டப்பிங் பேசிமுடித்துள்ளதாக அவரது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 6.21 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.