அதர்வா நடிக்கும் ‘டிரிகர்’ படத்தின் வெளியான ஆக்‌ஷன் திரில்லர் டீசர்!

அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் அதிரடியான டீஸர்!

அதர்வா நடிப்பில் நீண்ட வருட இடைவெளியின் பின் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு அந்த திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை.

Atharvaa, Tanya Ravichandran 12-Aug-2022

இந்நிலையில் அதர்வாவின் மற்றொரு படமான ‘டிரிக்கர்’ என்ற படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்தப் படத்தில் அதர்வாக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ மற்றும் ‘100’ போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் பி.எஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சில வருட இடைவெளிக்குப் பின் சினிமாவில் நடிகர் அருண் பாண்டியன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner