கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்

தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை இயக்கி வருகிறார் என்பது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ இந்தி படத்தின் படப்படிப்பு முடிந்தவுடன், இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா அடுத்தடுத்து வெற்றிமாறன், சிறுத்தை சிவா, ஞானவேல் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதை அடுத்து சூர்யா படத்தை இயக்குவதற்கு முன்பே கீர்த்தி சுரேஷை வைத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையம்சம் உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Sudha Kongara, Keerthy Suresh, 11th of August 2022
adbanner