மகன் பிறந்த நாள் குறித்து நடிகை சினேகா வெளியிட்ட அழகிய பதிவு

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சினேகாவின் மகன் விஹான் இன்று தனது 7வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை அடுத்து பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் நீச்சல் குளத்தில் மகன் மற்றும் மகளுடன் இருக்கும் ஜாலியான புகைப்படங்கள் உள்பட பல புகைப்படங்கள் உள்ளன. குறிப்பாக பிறந்தநாள் கொண்டாடும் விஹானின் பல்வேறு போஸ்கள் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இந்த பிறந்த நாள் பதிவில் சினேகா, என் லட்டு, என் செல்லம்!!! நீ எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் அன்பையும் அளித்து 7 அழகான ஆண்டுகள் ஆகின்றன. எந்த பெற்றோரும் கனவு காணும் குழந்தை நீ, நீ எங்கள் ஆசீர்வாதம். வார்த்தைகளில் சொல்வதை விட நான் உன் மீது மிகவும் அன்பு செலுத்துகிறேன், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் விஹான் தங்கம்!! என்று பதிவு செய்துள்ளார்.

Sneha, Celebrity , 11th of August 2022

மேலும் நடிகை சினேகா கடைசியாக தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் தற்போது ’ஷாட் பூட் 3’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sneha, Celebrity , 11th of August 2022
adbanner