மீண்டும் படப்பிடிப்பு தளத்தில் காயமடைந்த நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி

விஷால் ’மார்க் ஆண்டனி’ படத்தின் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்திற்காக 1990 களில் இருந்த அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டு அந்த செட்டில் மாஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ’மார்க் ஆண்டனி’ படத்தின் ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பின்போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இரண்டு முறை ’லத்தி’ படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்த விஷால் தற்போது மீண்டும் அடைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் , ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார் என்பதும் ஜீவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal, Mark Antony, Adhik Ravichandran,11th of August 2022
adbanner