விஜய்யின் ”வாரிசு” படத்தில் ஷாம் கதாப்பாத்திரம் இதுதானா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

‘வாரிசு’ படத்தில் நடிக்கும் ஷாம் கதாப்பாத்திரம் குறித்து வெளியான செய்தி!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தை வம்சி இயக்கி வரும் நிலையில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Varisu, Vijay, Shaam 11-Aug-2022

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக் காட்சி குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் ஷாம் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில், விஜய்க்கு அண்ணன் வேடத்தில் ஷாம் நடிப்பதாக தெரியவந்துள்ளது.

எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், கடந்த 2000 ஆம் ஆண்டு விஜய் – ஜோதிகா நடித்த ‘குஷி ‘படத்தில் ஷாம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் 22 வருடங்களின் பின் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner