லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி இணையும் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்! மாஸ் அப்டேட்

சூர்யா – கார்த்தி இணையும் லோகேஷ் படத்தின் வெளியான சூப்பர் தகவல்!

சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

Suriya, Karthi, Lokesh Kanagaraj 11-Aug-2022

சூர்யா – கார்த்தி இருவருமே சரியான கதை கிடைத்தால் இணைந்து நடிக்க தயாராக இருப்பதாக பல மேடைகளில் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஐயப்பனும் கோஷியும்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிஜூ மேனன் கேரக்டரில் சூர்யாவும், பிரித்விராஜ் கேரக்டரில் கார்த்தியும் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

adbanner