அமெரிக்காவில் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்த தமிழ் நடிகர்!

அமெரிக்காவில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை சந்தித்த பிரபல நடிகர் குறித்த தகவல்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவரை பிரபல தமிழ் நடிகர் ஒருவர் சந்தித்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

A R Rahman, Nepoliyan 11-Aug-2022 001

அமெரிக்கா சென்றுள்ள ஏ ஆர் ரஹ்மான் தனது இசை பணிகளை கவனித்துக் கொண்டே ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்கும் பணிகளையும் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் நெப்போலியன் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நடிகர் நெப்போலியன் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

A R Rahman, Nepoliyan 11-Aug-2022

அதில் அவர், “ஆஸ்கார் நாயகன் திரு ஏ ஆர் ரஹ்மான் அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் நாஷ்வில்லில் நேற்று முன்தினம் இரவு (ஆகஸ்ட் 9) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திக்கிறேன்..!
அதே அன்பான உபசரிப்பு…!” என பகிர்ந்துள்ளார்.