பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரேமம் இயக்குனரின் அடுத்த படம் ரிலீஸ் குறித்த செய்தி!

‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், அதைத்தொடர்ந்து ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் அனைத்து திரையுலகிலும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஓர் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Alphonse Puthren, Prithviraj Sukumaran, Nayanthara 11-Aug-2022

அவ்வளவு பெரிய ஹிட் கொடுத்துவிட்டு 5 ஆண்டுகளாக அவரின் அடுத்த படம் குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பஹத் பாசிலை வைத்து ‘பாட்டு’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக இப்போது பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிக்கும் ‘கோல்ட்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Alphonse Puthren, Prithviraj Sukumaran, Nayanthara 11-Aug-2022 001

இந்நிலையில் ‘கோல்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி ஓனம் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் வெளியாவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.