சின்னத்திரையில் களம் புகும் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ்!

சினிமாவில் இருந்து தற்போது சின்னத்திரைக்கு திரும்பிய பாக்யராஜ் குறித்த செய்தி!

தமிழ் சினிமாவில் பாக்யராஜ் இயக்கி நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்து அவரை சிறந்த இயக்குனராக நிலைநாட்டியது. ‘அவரின் முந்தானை முடிச்சு’, ‘தூரல் நின்னு போச்சு’ போன்ற ஒருசில படங்களில் சில்மிஷமான விஷயங்கள் இருந்தாலும், அதை யாரும் முகம் சுளிக்காத வண்ணம் பெண்களும் ரசிக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கி இருப்பார்.

K. Bhagyaraj 11-Aug-2022

ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் படங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறாமையால் குணச்சித்திர வேடங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் தற்போது அவர் சின்னத்திரை சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். ஏற்கனவே ‘சித்தி 2’ சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பாக்யராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வித்யா நம்பர் 1’ எனும் சீரியலில் நீதிபதி கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் அவர் நடிக்க உள்ளார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.