’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் மெகா நடிகர்கள்?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும், ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற ‘பொன்னி நதி’ என்ற சிங்கிள் பாடல் மற்றும் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Kamal Haasan, Ponniyin Selvan, Rajinikanth 10th of August 2022