கார்த்தி தனது அண்ணன் சூர்யாவிற்காக எழுதிய கதையை படமாக்குவது குறித்த செய்தி!

அண்ணனுக்காக தான் எழுதிய பயோபிக் கதை குறித்து கார்த்தி வெளியிட்ட செம தகவல்!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராகியுள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார், மற்றும் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் போன்ற ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை கோலாகலமாக நடைபெற்றது.

Karthi, Suriya 10-Aug-2022

இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கார்த்தி பேசிய போது, “தனது அண்ணனான நடிகர் சூர்யாவை இயக்க ஆசைப்படுவதாகக் கூறியுள்ளதோடு, நான் ஆயுத எழுத்து படத்தில் மணிரத்னம் சாருக்கு உதவி இயக்குனராக பணியாற்றி முடித்த நிலையில், அண்ணனுக்காக ஒரு பயோபிக் கதையை எழுதினேன். அதை படமாக்குவது என்னுடைய கனவு” என தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் கார்த்தி உதவி இயக்குனராக பணியாற்றி இருந்த போதும், அவர் அந்த பாதையில் செல்லாமல் ‘பருத்திவீரன்’ படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நிலையில், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

adbanner