சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு! அஜய் ஞானமுத்து வெளியிட்ட தகவல்

‘கோப்ரா’ படம் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

Vikram, Cobra 10-Aug-2022

இந்நிலையில் தற்போது ‘கோப்ரா’ திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீசாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மும்மரமாக ஆரம்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கே.எஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.