கமல் – உதயநிதி கூட்டணியின் படத்தை இயக்கும் இயக்குநர் குறித்த செய்தி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது என்பதும் இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி தற்போது இணைய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று கமல்ஹாசன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

கமல் மற்றும் உதய நிதி இணையும் இப்படம், ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநர்கள் உள்ளிட்ட தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்த நிலையில், இப்படத்தை சசிக்குமாரின் ‘கிடாரி’ படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.