‘ஏகே 61’ பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

‘ஏகே 61’ படத்தின் வெளியான முக்கிய சூப்பர் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது, ‘ஏகே 61’ என்னும் படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AK 61, Ajith 09-Aug-2022

சமீபத்தில் ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, அஜித்குமார் இப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸாக வாய்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த செய்தியால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.