வெந்து தணிந்தது காடு’… ஆடியோ ரிலீஸ் வெளியான தகவல்!!!

மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்தார் சிம்பு. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இசை கச்சேரிக்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இசை வெளியீடு தாமதமானது. இந்நிலையில் அவர் இந்தியா திரும்பியதும் செப்டம்பர் 1 ஆம் தேதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளையும் தயாரிப்பாளர் தற்போது மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Simbu, AR Rahuman, Gautham Menon, Vendhu Thanindhathu Kaadu, 09th of August 2022