பிசாசு 2ல் அந்த காட்சிகளை நீக்கிவிட மிஷ்கின் தீர்மானம்

பிசாசு படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் அவர்கள் “பிசாசு 2” என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். இதில் லீடிங் ரோலாக முன்னணி நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஆன்ட்ரியா ஒரு முக்கியமான காட்சியில் தான் நிர்வாணமாக நடித்துள்ளதாகவும் அந்த சீன் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடிக்க வேண்டியது இருந்ததாகவும் சமீபத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து பேசிய மிஸ்கினும். கதைக்கு தேவை என்பதால் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தார் என்றார்.

ஆனால் தற்போது அப்பிடத்திலிருந்து அந்த காட்சியை நீக்க போவதாகவும் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஏனென்றால் பேய்படம் என்றாலே சிறுவர்களும், குழந்தைகளும் படத்தை பார்க்க ஆர்வப்படுவார்கள். என்பதால் அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் அதனால் இப்படத்தில் இருந்து அந்த நிர்வாணக்காட்சி நீக்கப்படும் என மிஷ்கின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

pisasu 2, mysskin, andrea jeremiah, 08th of august 2022