எனக்கு பிடித்த நடிகர் இவர் தான் – அதிதி ஷங்கர் வெளிப்படையான கருத்து!

அதிதி ஷங்கர் தனக்கு மிகவும் பிடித்த நடிகரை மனம் திறந்து பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விருமன்’. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், சூரி, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Aditi Shankar, Suriya, Viruman 10-Aug-2022

நடிகர் சூர்யா தயரித்துள்ள இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் 12 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

மேலும் ‘விருமன்’ படம் திரைக்கு வரும் முன்பே அதிதி ஷங்கர், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் தமிழ் சினிமாவில் தனக்குப் பிடித்த நடிகர் சூர்யா எனவும், தான் அவரது தீவிர ரசிகை எனவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் சூர்யாவின் படத்தில் அதிதி ஷங்கர் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

adbanner