சிவகார்த்திகேயன் எடுத்த புதிய முயற்சி, குவியும் வாழ்த்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’பிரின்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இந்த படத்தின் சிங்கிள் பாடல், டீசர் டிரைலர் ஆகியவை விரைவில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நடித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தில் முதல் முறையாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சிவகார்த்திகேயன் தனது சொந்த குரலில் டப்பிங் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் தெலுங்கில் டப் செய்யவிருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் தற்போது ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் முக்கிய கேரக்டர்களில் யோகிபாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan, prince, maaveeran, anudeep, maria ryaboshapk 08th of august 2022
adbanner