‘விக்ரம்’ பட நடிகை ‘தளபதி 67’ படத்தில் இணைகிறாரா?

‘தளபதி 67’ படத்தில் இணையும் பிரபல நடிகை குறித்த செய்தி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் ‘தளபதி 67’ படத்திலும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளன.

thalapathy 67, vijay, swathishta 08 aug 2022

‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர் நடிகை சுவஸ்திகா கிருஷ்ணன். இவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து, அதில் ‘தளபதி 67’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். அந்தவகையில், அடுத்து அவர் ‘தளபதி 67’ படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் சமந்தா மற்றும் த்ரிஷா ஆகிய இரு நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது சுவஸ்திகா கிருஷ்ணனும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

adbanner