யோகிபாபு கைவசமுள்ள படங்கள் எத்தனை தெரியுமா? வைரலாகும் தகவல்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தற்போது கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கும் நடிகர் தான் யோகி பாபு. சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி, விஜய்சேதுபதி, விஜய் ,அஜித் தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் தற்போது வரை நடித்து அசத்தி வருகிறார்.

மேலும் மண்டேலா, கூர்கா, தர்ம பிரபு போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். இதில் மண்டேலா திரைப்படத்திற்கு 2 தேசிய விருது கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் கதாநாயகனாக யோகி பாபு இயக்குனர் தங்கர்பச்சனின் இயக்கத்தில் கருமேகங்கள் கலைகின்றன என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அப்படத்தின் பூஜையும் சமீபத்தில் நடைபெற்று வைரலானது. மேலும் தளபதி விஜயின் வாரிசு, ஷாருக்கானின் ஜவான் போன்ற படங்களிலும் காமெடியனாகவும் நடித்து வருவதை தொடர்ந்து யோகி பாபு தற்போது வரை 41 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலால் திரை பிரபலங்கள் அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர். ஏனெனில் முன்னணி நடிகர்களான பலரும் 3, 5 உள்ளிட்ட எண்களிலேயே படங்களை கையில் வைத்து நடித்து வரும் நிலையில், யோகி பாபு அனைவரையும் மிஞ்சியுள்ளார்.

yogi babu, 08th august 2022
adbanner