தொலைக்காட்சிப் பேட்டியில் தளபதி விஜய்யை புகழ்ந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்

இந்தி சினிமாவில் தங்கல், தாரே ஜாமின் தார், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார்.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

aamir khan, vijay 08th august 2022

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் அமீர்கான் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நடிகர் விஜய் ஒரு அற்புதமான மனிதர். அவரைப் பார்க்கும்போது, குடும்பத்தில் ஒருவரை, சகோதரரை பார்க்கும் எண்ணம் உருவாகிறது. நான் முதலில் ரஜினிகாந்தை பார்த்தபோது தோன்றியதுதான், விஜய்யைப் பார்க்கும்போது தோன்றியது எனத் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் அமீர் கான் நடிகர் விஜய் பற்றி ஏ.ஆர்.முருகதாஸிடம் அவரது டான்ஸ் திறனை பற்றி வியந்து கூறியது குறிப்பிடத்தக்கது.

adbanner