விஜய் சேதுபதிக்கு லைன்னில் நிற்கும் தெலுங்கு திரையுலகம்! அசுர வேகத்தில் எகிறும் சம்பளம்

விஜய் சேதுபதிக்கு தெலுங்கு திரையுலகில் குவியும் பட வாய்ப்புகள்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லன், சிறப்புத்தோற்றம் ஆகிய வேடங்களிலும் நடித்துக் அனைத்து திரையுலகத்தினரையும் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து ‘வாக்குல ரெண்டு காதல்’, ‘விக்ரம்’ மற்றும் மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

vijay sethupathi 08 aug 2022

இந்நிலையில் தமிழ் திரையுலகம் தவிர்ந்து, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய மார்க்கெட் என்று கூறப்படுகிறது.

பல முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக்க கேட்டுவருகிறார்களாம். இதனால் வரும் வாய்ப்புகளுக்கு எல்லாம் சம்பளத்தை அதிகரித்து தனது டிமாண்டை மெருகூட்டி வருகிறாராம் விஜய் சேதுபதி.

adbanner