சூரியுடன் ரம்யா பாண்டியன் நடித்த வீடியோ செம வைரல்

பிரபல காமெடி நடிகர் சூரியுடன் நடிகை ரம்யா பாண்டியன் நடித்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் பிரபலம் என்பதும் அவரது பதிவிற்கு அவரது லட்சக்கணக்கான ஃபாலோயர்களின் லைக்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகளை சிறு குழந்தைகள் முதல் பலர் நடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

don, soori, ramya pandian, sivakarthikeyan, 07th of august 2022

அந்த வகையில் சிவகார்த்திகேயன், சூரி நடித்த ‘டான்’ படத்தின் காமெடி காட்சியை சூரியுடன் ரம்யா பாண்டியன் நடித்த வீடியோ அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இருவரும் செம ஆக நடித்துள்ளதை அடுத்து இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரம்யா பாண்டியனின் நடிப்பு வேற லெவல் என கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

adbanner