விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்தில் இத்தனை வில்லன்களா?!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த படம் குறித்து செய்திகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட வில்லன்கள் இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் போன்ற வில்லன்களும், ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, செம்பன் வினோத், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட வில்லன்களும் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கயிருக்கும் ’தளபதி 67’ படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் சஞ்சய்தத் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் மற்ற வில்லன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது மும்பையில் லோகேஷன் பார்த்து வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படம் குறித்து முழு தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay , Lokesh Kanagaraj, Thalapathy 66, 07th of August 2022
adbanner