நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நேரில் அவருடைய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆனால் அதே நேரத்தில் தமிழ் திரை உலகில் இருந்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஒரே தமிழ் ஹீரோ விஜய் சேதுபதி மட்டுமே.
மேலும் நடிகை மாளவிகா மோகனன் தனது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் இருக்கும் ஒரே தமிழ் ஹீரோ விஜய் சேதுபதி மட்டுமே. இதனை அடுத்து இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாகவும் அதனால் தான் விஜய் சேதுபதி இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்திருந்த நிலையில் இருவரும் ஜோடியாக விரைவில் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் தற்போது ’யுத்ரா’ என்ற இந்தி படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பதும், அதிரடி ஆக்சன் படமான இந்த படம் அவருக்கு பாலிவுட் திரையுலகில் ஒரு நல்ல எண்ட்ரியை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
