டெல்லியில் சூப்பர் ஸ்டார், ‘ஜெயிலர்’ படத்தின் புதிய அப்டேட் !!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் ‘ஜெயிலர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் நடைபெறும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லியில் அவர் சுமார் பத்து நாட்களுக்கு மேல் தங்கியிருந்து ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதன்பிறகு அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்படும் அதே நேரம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Rajinikanth, Jailer, Anirudh, 06th of August 2022