விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் கதை குறித்து இணையத்தில் கசிந்த மாஸான தகவல்!
விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தின் தகவல்களை விட, விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்தின் தகவல்கள் தான் மிகவும் பரபரப்பாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தின் கதையை மும்மரமாக எழுதி வருவதாக சமீபத்தில் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த நிலையில், தற்போது அவர் இந்தப் படத்தின் லொக்கேஷனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் லொக்கேஷன் பார்ப்பதற்காக மும்பை சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ‘தளபதி 67’ திரைப்படம் ஒரு மும்பை தாதாவின் கதை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மும்பை பின்னணியில் விஜய் ‘தலைவா’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. எனவே ‘தளபதி 67’ லோகேஷ் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.