இயக்குனர் ஷங்கர் படத்தில் சூர்யா இணைந்தது குரித்து வெளியான செய்தி!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தொடர்ந்து, அடுத்து கமலின் விக்ரம் படத்தில் முக்கிய சிறப்புத்தோற்றத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கேரக்டர் தற்போதுவரை ஒரு பேசு பொருளாகவே அமைந்துள்ளது.
இதை தொடர்ந்து சூர்யா தற்போது பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையில் சிறுத்தை சிவாவுடன் ஒரு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகிவரும் ‘ஆர்சி 15’ படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.