டைட்டில் கூட அறிவிக்காத கார்த்தி படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய நிறுவனம்! செம அப்டேட்

கார்த்தி படத்தை டைட்டில் அறிவிப்புக்கு முன் விலை பேசிய பிரபல நிறுவனம்!

தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற சூப்பர் திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தற்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

Karthi, Raju Murugan 06-Aug-2022

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளுக்காக ராஜு முருகன் தற்போது கேரளாவில் தங்கியுள்ளாராம். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 ஆவது படமாக அமைவதால் அதிக கவனத்தோடு உழைக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்துக்கு ஜப்பான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்னும் இந்த படத்தின் தலைப்பு கூட அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளது. இதுவரை கார்த்தி படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை ஆனதில்லை என கூறப்படுகிறது.

Exit mobile version