‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டிரைலர் குறித்து அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் டிரைலர் குறித்து வெளியான வீடியோ!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush, Priya Bhavani Shankar, Thiruchitrambalam 06-Aug-2022

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என படத்தின் கதாநாயகி பிரியா பவானி சங்கர் அறிவித்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருச்சிற்றம்பலம் டிரைலர் வெளியாகும் என வெளியிட்டுள்ள வீடியோவை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.