‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய தகவலை வெளியிட்ட நடிகை சித்தி இத்னானி!!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் நடிகை வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி வகிக்கும் நடிகர்களில் ஒருவராக தற்போது சிம்பு வளம் வருகிறார். ‘மாநாடு’ திரைப்படத்துக்கு பின் சிம்பு நடிக்கும் திரைப்படமான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்திற்கு மேலும் அதிகளவான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் மேனன் – ஏஆர் ரஹ்மான் ஆகியவர்களின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

Simbu, Siddhi Idnani, Vendhu Thanindhathu Kaadu 06-Aug-2022

இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில், சிம்பு தன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை சமீபத்தில் பேசி முடித்தார். இது குறித்த புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

அந்தவகையில் தற்போது கதாநாயகி சித்தி இத்னானி தன் காட்சிகளுக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக அவரது சமூகவலைதளத்தில் இயக்குனர் கவுதம் மேனனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டதன் மூலம் தெரிவித்துள்ளார்.

Simbu, Siddhi Idnani, Vendhu Thanindhathu Kaadu 06-Aug-2022 0011