மீண்டும் இணையத்தில் கசிந்துள்ள ‘வாரிசு’ படப்பிடிப்பு தளப் புகைப்படங்கள்!

‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாநடிக்க, மற்றும் பிரபு, பிரகாஷ் ராஜ் போன்றோர் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Vijay, Rashmika, Varisu 06-Aug-2022

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தெலுங்கானா என இரு இடங்களிலும் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. படம் சம்மந்தமாக எந்தவொரு புகைப்படமும் வெளியாவதை விரும்பாத படக்குழு பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

இந்நிலையில் முன்பு சென்னையில் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் ரஷ்மிகா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதுபோல தற்போது மற்றுமொரு படப்பிடிப்புத் தளதளத்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vijay, Rashmika, Varisu 06-Aug-2022 001