விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘லைகர்’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லைகர்’ திரைப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் என்றும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் 7 சண்டை காட்சிகள் என்றும் ஆறு பாடல்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யாகிருஷ்ணன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஆகும். இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Liger, Vijay Deverakonda 05th of August 2022