விக்ரமின் விஸ்வரூப வெற்றியால் சம்பளத்தில் உச்சம் தொட்டார் உலக நாயகன்

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அந்த ஒரே படத்தின் வெற்றியால் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களான ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர்களை கமல்ஹாசன் முந்திவிட்டதாக கோலிவுட் திரையுலகில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி வாங்கி வருகிறார் என்றும் ’ஜெயிலர்’ திரைப்படத்திற்கும் அவர் ரூ.100 கோடி வாங்கியதாகவும் கூறப்பட்டது. அதேபோல் லைகா நிறுவனம் தயாரிக்கும் ’ஏகே 62’ படத்தில் நடிக்க அஜீத் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் சம்பளத்தை 130 கோடியாக உயர்த்தி உள்ளதாகவும் அந்த சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த ஒரே ஒரு வெற்றி காரணமாக ரஜினி, அஜித், விஜய் சம்பளத்தை கமல்ஹாசன் முந்திவிட்டதாக கூறப்படுகிறது.

Vijay, Ajith, Kamal Haasan, Rajinikanth, Varisu, AK 62, Jailer 05th of August 2022