‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவல் குறித்து காஜல் அகர்வால் கொடுத்த ஷாக்! வெளியான ஷூட்டிங் தேதி

காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் இருந்து தான் விலகியதாக வெளியான தகவலுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வெளிவராத நிலையில் உள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

Indian 2, Kajal Aggarwal 05-Aug-2022

மேலும் படம் குறித்து லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அதில் சுமூக முடிவு ஏற்பட்டு விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டு விட்டதாகவும், அவருக்குப் பதில் தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வைரலானது. ஆனால் அதை மறுத்துள்ள காஜல் அகர்வால் “நான் ‘இந்தியன் 2′ ஷூட்டிங்கில் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் கலந்துகொள்ள உள்ளேன்’ என்று சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இணையத்தில் வைரலான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.