அடுத்த படத்தில் விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் இயக்குனர் எச் வினோத்!

விஜய் சேதுபதி – எச் வினோத் கூட்டணியின் படம் குறித்த செய்தி!

எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பின் அவர் இயக்க இருக்கும் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் விஜய் சேதுபதியை இயக்குனர் எச் வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளார்.

H Vinoth, Vijay Sethupathi 05-Aug-2022

ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும் தான் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதும் வெற்றி பெறாததால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் விக்ரமின் ‘கோப்ரா’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘ஏகே 61’ படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனேயே இந்த படம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.