மீண்டும் இயக்குனர் ஆகும் நடிகர் தம்பி ராமையா! ஹீரோ யார் தெரியுமா?

தம்பி ராமையாவின் இயக்கத்தில் இணையும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் தம்பி ராமையா. இவர் இயக்கத்தில் முரளி நடித்த ‘மனுநீதி’ மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’, மணியர் குடும்பம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். அதன் பின்னர் மைனா படத்தை தொடர்ந்து முன்னணி குணச்சித்திர, காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

Thambi Ramaiah, Samuthirakani 05-Aug-2022

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் இயக்குனராகி ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சமுத்திரக்கனி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ள நிலையில், அவரோடு தம்பி ராமையாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும் தம்பி ராமையாவும் ஏற்கனவே இணைந்து நடித்த ‘விநோதய சித்தம்’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையாக ஆரம்பிக்கப்பட்டது. படத்துக்கு ‘ராசாக்கிளி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.