‘ஏகே 61’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? பரபரப்பு தகவல்!

அஜித் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வைரலாக செய்தியால் பரபரப்பு!

அஜித் நடிக்கும் 61 வது படத்தை நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குகிறார் என்பதும் போனி கபூர் தயாரித்துவருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என கூறப்பட்டுள்ளது. மற்றும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

Ajith, AK 61 05-Aug-2022

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அஜித் ஐரோப்பிய பயணம் சென்றதால் அவர் தவிர்ந்த காட்சிகளை எச் வினோத் படமாக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அஜித் இந்தியா திரும்பி உள்ளதால் மீண்டும் அவர் இருக்கும் காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘ஏகே 61’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற போலிஸார் அங்கிருந்த கேமராக்களை பறிமுதல் செய்து சென்றதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி வந்தன. ஆனால் அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.