பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

‘நட்சத்திரம் நகர்கிறது’ ரிலீஸ் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

பா ரஞ்சித் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்த மற்றும் புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றிய நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் அதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது என்பது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளியானது. மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Pa Ranjith, Natchathiram Nagargirathu 05-Aug-2022

இந்நிலையில் தற்போது ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விரைவாக தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மற்றும் இந்த படத்தின் டீசர், டிரைலர் சிங்கிள் பாடல்கள் ஆகியவற்றை வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Pa Ranjith, Natchathiram Nagargirathu 05-Aug-2022 001