மற்றுமொரு சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த ‘விக்ரம்’ பட நடிகை!

‘விக்ரம்’ பட நடிகை மற்றுமொரு பிரபல நடிகரின் படத்தில் நடிப்பது குறித்த செய்தி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘விக்ரம்’. 500 கோடி ரூபா வசூல் செய்து, சாதனை படைத்தது.

mammootty, Vasanthi 05-Aug-2022

இந்தப் படத்தில் ஏஜெண்ட் சீனா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை வசந்தி. இப்படத்தில் அவர் நடித்த கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்தது. ‘விக்ரம்’ படம் மூலம் பிரபலமான நடிகை வசந்தி, தற்போது, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டியுடன் நடிகை வசந்தி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள சூப்பர் ஸ்டாரின் படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடிக்கவுள்ள வசந்திக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.