பிரபல நடிகர் படத்தில் இணையும் நடிகை பிரியங்கா மோகன்

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் பிரியங்கா மோகன். முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கி இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே மக்கள் மனதில் ஆழமாக பதிந்த இவர் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் போன்ற வெற்றி படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

Jayam Ravi, Priyanka Mohan 04th of August 2022

இந்நிலையில் பிரியங்கா மோகினி அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் முன்னணி நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jayam Ravi, Priyanka Mohan 04th of August 2022