சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளும் ‘விருமன்’ பட நாயகியுமான அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சரிதா மற்றும் பிரபல இயக்குனர் மிஷ்கின் ஆகியோரும் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் காமெடி உச்சகட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ ’வேலைக்காரன்’ ’நம்ம வீட்டு பிள்ளை’ ’டாக்டர்’ உள்பட பல படங்களில் யோகிபாபு நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
