‘ஜோக்கர் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று ’ஜோக்கர்’ என்பதும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 70 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகி ஒரு பில்லியனுக்கும் அதிகமான வசூலை குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ’ஜோக்கர் 2’ படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி ’ஜோக்கர் 2’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜோக்கர் படத்தை ரசித்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இன்னும் இரண்டு வருடங்களுக்கும் மேல் இந்த படத்திற்காக காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.

முதல் பாகத்தில் நடித்த Joaquin Phoenix உள்பட பெரும்பாலானோர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் முதல் பாகத்தில் நடித்த நாயகன் Joaquin Phoenix சம்பளமாக $4.5 மில்லியன் பெற்ற நிலையில் அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாம் பாகத்திற்கு $20 மில்லியன் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version