பிரபல இந்தி இயக்குனருடன் கூட்டணி சேரும் சூர்யா! வேற லெவல் அப்டேட்

சூர்யாவின் அடுத்து உருவாக்க இருக்கும் பிரமாண்டமான படம் குறித்த செய்தி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்து, சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya, Bollywood Movie 04-Aug-2022

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் 2 வது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் சிறுத்தை சிவாவின் படத்தின் வேலைகளை சூர்யா ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்தபடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதில், பிரபல ஃப்ரூக் கபிர் இயக்கவுள்ள ஒரு படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை பிரமாண்டமாக உருவாக்கவுள்ள நிலையில், படம் குறித்து சூர்யாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படம் ஆரம்பிக்க தாமதம் ஆகும் என்பதால் சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.