சாய் பல்லவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்!
‘பிரேமம்’ படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள ‘கார்கி’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இந்த படத்தை சூர்யா – ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதன்படி ஆகஸ்ட் 12 ஆம் தேதி ‘கார்கி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.