முன்னணி நடிகரின் திரைப்படத்திற்கு திடீர் தடை விதிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சியில் !

நாளை வெளியாக உள்ள முன்னணி நடிகரின் படத்திற்கு திடீரென தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நாளை அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ’சீதாராமன்’. துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதம் சார்ந்த சில விஷயங்களை இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதால் குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகள் ஆகியவை இந்த படத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே துல்கர் சல்மான் நடித்த ’குரூப்’ என்ற படத்திற்கும் அரபு நாடுகள் தடை விதித்த நிலையில் தற்போது அவரது ’சீதாராமன்’ படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishal, Sita Ramam 04th of August 2022