சன்னி லியோன் கோபத்தில் செய்த செயல்! வீடியோ வைரல்

சன்னி லியோன் வெளியிட்ட புதிய வீடியோ இணையத்தில் வைரல்!

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ போன்ற ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sunny Leone 04-Agu-2022

நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 53 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் இவர் இடும் ஒவ்வொரு பதிவும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சன்னி லியோன் தற்போது நடித்து வரும் ‘ஷீரோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு காட்டுப்பகுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் திடீரென கோபத்தில் ஒரு மரத்தை மிக ஆக்ரோஷமாக வெட்டுவது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக அவர் கூறியிருப்பது, “நீங்கள் கோபத்தில் இருக்கும்போது இதுபோல கடினமான வேலையை செய்தால் கோபம் தீர்ந்துவிடும் என்றும் மேலும் இந்த பதிவின் பின் குறிப்பில், இங்கு எந்தவிதமான மரங்களும் துன்புறுத்தப்படவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.